ஏற்ற மண் வகைகள்:
கரிசல்
மண் மிளகாய் சாகுபடி செய்ய ஏற்ற மண் வகையாகும் (கரிசல் மண் நீரை சேமித்து வைக்கும்
தன்மையுடையது) மற்றும் நல்ல வடிகால் வசதி உடையதாக நிலம் இருப்பது சிறந்தது.
மண்ணின் கார அமில அளவு (pH)
: 6.5 முதல் 7.5 இருப்பது ஏதுவானது.
பருவகாலங்கள் (பட்டம்):
மிளகாய்
ஒரு வெப்பமண்டல பயிர் ஆகும் எனவே குறைந்த பட்சம் 8 மணி நேரம் சூரிய ஒளி உள்ள இடங்களில்
நடுவது அவசியம். நன்கு வளர்ந்த மிளகாய் செடிக்கு 8 மணி நேரம் சூரிய ஒளி வெளிச்சம் மற்றும்
ஈரப்பதமான சூழ்நிலை தேவை. அதன் படி மிளகாய் பயிரிடுவதற்கு உகந்த காலம் கீழே கொடுக்கப்பட்டுள்ளன
,
1. ஜனவரி
– பிப்ரவரி ( தை பட்டம்)
2. ஜூலை
– ஆகஸ்ட் ( ஆடி பட்டம்)
இரகங்கள்:
1. சம்பா.
K2(நாட்டு வகை)
2. ஒட்டு
_ இந்திரா பிளஸ்(பச்சை ,சிவப்பு)
கிரண்
சியரா (மைக்கோ)
3. குண்டு
_ ராயல் புல்லட்
ரெங்கா (சிறப்பானது)
விதை நேர்த்தி :
நாற்றங்காலில் விதை விதைப்பதற்கு முன்பாக விதை நேர்த்தி
செய்ய வேண்டும். இதனால் விதை மூலம் பரவக் கூடிய நோய்க்கிருமிகளை பரவாமல் கட்டுக்குள்
வைக்க முடியும்.
ஒரு ஏக்கருக்கு விதைப்புக்கு
விதை நேர்த்தி செய்ய தேவையான பொருட்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன
1.
400 கிராம் மிளகாய்
விதை
2.
10 மில்லி (அ) 10 கிராம் சூடொனமோஸ்
3.
50 மில்லி (அ) 50 கிராம் அஸொஸ்பைரில்லம்
4.
தேவையான
அளவு வடித்த அரிசி கஞ்சி
செய்முறை:
மிளகாய் விதை, சூடொனமோஸ்,
அஸொஸ்பைரில்லம் மற்றும் வடித்த அரிசி கஞ்சி ஒன்றாக கலந்து 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்
பின்பு அதனை 30 நிமிடம் நிழலில் உலர்த்தி நாற்றங்காலில் நடலாம். இவ்வாறு விதை நேர்த்தி செய்வதனால் விதை மூலம் பரவும்
நோய்களைத் தடுக்கலாம். மேலும் பரிந்துரைக்கப்படும் அளவில் 25 சதவீத தழைச்சத்தினைக்
குறைக்கலாம்.
பயன்கள்:
1. மண் மற்றும் விதை மூலம் பரவும் நோய்கிருமிகளில் இருந்து
விதையை பாதுகாக்கும்.
2. விதை முளைப்பு திறனை அதிகரிக்கும்.
3. சீரான வளர்ச்சிக்கு வழி வகுக்கும்.
4. பயிறு வகைகளில்,
வேர் முடிச்சி உருவாவதை அதிகபடுத்துகிறது.
நற்றாங்கால் நடவு:
நிலத்தை தயார் செய்தல்:
நடவு வயலை நன்கு உளி கலப்பை கொண்டு இரண்டு அல்லது
மூன்று முறை உழவு செய்ய வேண்டும்.
முதல் உழவிற்கு பிறகு, ஒரு ஏக்கருக்கு சுமார் 50 கிலோ சுவற்றுக்கு அடிக்கும் சுண்ணாம்பு தூள் அல்லது கிளிஞ்சல் சுண்ணாம்பு தூள் மற்றும் 100 கிலோ செங்கல் சூலை சாம்பல் அல்லது அடுப்பு சாம்பல் மண்ணில் தூவி இரண்டாம் உழவு உழ வேண்டும். மிளகாய் சாகுபடியில் மிக முக்கியமான தேவை கால்சியம் மற்றும் சாம்பல் சத்து. கால்சியம் சத்து குறைபாட்டால் மிளகாயின் இறுதி பகுதி அழுகல் ஏற்பட வாய்ப்பு உண்டு ( படம் 1)
படம் 1 கால்சியம் சத்து குறைபாட்டால் மிளகாயின்
இறுதி பகுதி அழுகுதல்
இரண்டாம்
உழவிற்கு பிறகு, ஒரு ஏக்கருக்கு நான்கு ட்ராக்டர் லோடு நன்கு மக்கிய தொழு உரத்துடன் கீழ் கொடுக்கப்பட்டுள்ள
உயிர் உரத்தை திரவமாகவோ அல்லது பவுடராகவோ கலந்து பின் மூன்றாம் உழவு உழ வேண்டும்.
|
வ.எண் |
உயிர் உரம் |
திரவ உரம் அளவு |
பவுடர் உரம்
அளவு |
பயன் |
|
1 |
அஸோஸ்பைரில்லம் |
2 லிட்டர் |
4 கிலோ |
பயிர்களுக்கு தழைச்சத்தை (நைட்ரஜன் ) மண்ணிலிருந்தும், காற்றிலிருந்தும்
கிரகித்து பயிருக்கு தருகிறது |
|
2 |
பாஸ்போபாக்டிரியா |
1 லிட்டர் |
2 கிலோ |
மண்ணில் கரையாமல்
இருக்கும் மணிச்சத்தைக் (பாஸ்பரஸ்) கரைத்துப் பயிருக்குக் கொடுக்கும் |
|
3 |
பொட்டாஷ் பாக்டீரியா |
1 லிட்டர் |
2 கிலோ |
மண்ணில் அங்ஙக
சத்தையும் கிட்டா நிலையில் உள்ள சாம்பல் சத்தையும் (பொட்டாசியம்) பயிருக்கு கிரகித்து கொடுக்கும் |
|
4 |
சூடோமோனஸ் |
1 லிட்டர் |
2 கிலோ |
புள்ளி நோய்,
வாடல் நோய், அழுகல் நோய்;, கருகள் நோயை, பூஞ்சான தாக்குதலை கட்டுப்படுத்தும் |
இருமடி பாத்தி:
மிளகாய், தக்காளி, கத்தரிக்காய் பொன்ற காய்கறி பயிர்களுக்கு
இருமடி பாத்தி மிகவும் சிறந்தது ஆகும். இதன் மேல் மண் எளிதாக இருப்பதால் செடி
எளிதாக வளரும் என்பதுதான் இதன் சூட்சுமம் . உதாரணத்துக்கு , ஆரம்பத்தில் எளிதாக செரிக்கக்
கூடிய உணவு வகைகளைத்தான் குழந்தைக்கு ஊட்டுவாள் தாய் . குழந்தை வளர வளரத் தனக்கு வேண்டிய
உணவைத் தன் கையாலேயே எடுத்துச் சாப்பிடும் . இதன் அடிப்படையில் தான் இருமடிப் பாத்தி
செயல்படுகிறது .
இருமடி பாத்தி அமைத்தல்:
நிலத்தை ஒரு அடி ஆழம் ஒரு அடி அகலம் நீள் வாக்காக
சுமார் 20 அடி நீளம் வெட்ட வேண்டும்.
பின் நான்கு அடி அகலம் விட்டு, மீண்டும் ஒரு அடி ஆழம் ஒரு அடி அகலம் நீள் வாக்காக சுமார்
20 அடி நீளம் வெட்ட வேண்டும். பின்
நடுவில் நான்கு அடி அகலம் ஒரு அடி உயர பாத்தி ஏற்பட்டு இருக்கும் அதன் மேல் மாட்டு
சாணம் அல்லது தொழு உரம் தூவி பின் இருபுறமும் இருந்து எடுத்த மண்ணை அதன் மேல் போட்டு
இருமடி பாத்தி உருவாக்க வேண்டும். மிள்காய் நாற்றை படத்தில் கொடுத்துள்ளவாறு நடலாம்.
படம்
2. இருமடி பாத்தி
நற்றாங்கால் நடவு:
குழித்தட்டு முறை:
தேவையான பொருட்கள்:
1. தேங்காய் நார் கழிவு (90%)
2. ஊட்டமேற்றிய தொழு உரம் (அ) மண்புழு உரம் (10%)
3. விதை நடவு குழித்தட்டு
4. வேப்பம் புண்ணாக்கு
5. அஸோஸ்பைரில்லம்
6. பாஸ்போபாக்டீரியா
அ) முதலில் தேங்காய் நார் கழிவுகளை 10 நாட்களுக்கு தண்ணீரில் தொட்டியில் போட்டு ஊற வைக்க வேண்டும். இதன்மூலம் அதில்
உள்ள அமிலத்தன்மையை நீக்க முடியும். ( தென்னை நார்கழிவானது அதிகபடியான நீரை வடித்து
விடுவதுடன் நாற்றுக்கு தேவையான ஈரப்பததையும் தருகிறது.)
ஆ) மேற்கூரிய அனைத்து பொருட்களையும் ஒன்றாக கலந்து
குழித்தட்டில் நிரப்ப வேண்டும். பின் சிறிதளவு அழுத்தம் அதன் மேல் கொடுக்க வேண்டும்.
ஒரு குழிக்கு ஒரு விதை வீதம் (விதை நேர்த்தி செய்யப்பட்ட விதைகள்) விதைகளை குழியில்
நிரப்பி பின்பு அதன்மேல் சிறிதளவு தேங்காய் நார் கழிவு போட வேண்டும்.
இ) இந்த குழித்தட்டுக்கள் 50% சூரிய ஒளி உட்புகும் நிழல் வலை கொண்ட அமைப்பின் உள் வைப்பது சிறந்தது.
ஈ) பின்னர் இந்த குழித்தட்டை பாலீத்தீன் கொண்டு மூடி
பின்னர் மூன்று முதல் இந்து நாட்கள் கழித்து பாலீத்தீனை நீக்க வேண்டும். பின்பு முளைத்து
வரும் நாற்றுக்களுக்கு பூவாளி அல்லது ஸ்ப்ரேயர் மூலம் தினமும் இரண்டு அல்லது மூன்று
முறை தண்ணீர் தெளிக்க வேண்டும்.
எ) ஒன்று அல்லது மூன்று நாட்களுக்கு ஒருமுறை 10 மிலி பன்சகாவ்யாவை 10 லி தண்ணீருடன் கலந்து தெளிப்பத்தால் நாற்றின் வளர்ச்சி
மேம்படும்.
ஏ) மழைக்காலங்களில், இந்த நாற்றுக்கள் உள்ள குழித்தட்டுக்கள்
கம்பிகள் கொண்டு அமைக்கபட்ட அமைப்பில் பாலீத்தீன்
கொண்டு மூடுவது அவசியம்.
உ) 20 முதல் 25 நாட்களுக்கு பின் இந்த நாற்றுக்களை நடவு வயலுக்கு மாற்றலாம்.
50% சூரிய ஒளி உட்புகும் நிழல் நாற்றுக்கள் உள்ள குழித்தட்டு
வலை கொண்ட அமைப்பு
குழித்தட்டு முறையில்
நன்மைகள்:
1. ஒரே சீரான
வளர்ச்சி உடைய
நாற்றுக்கள் உருவாகின்றன.
2. பருவமற்ற காலங்களிலும்
நாற்றுக்கள் உற்பத்தி
செய்ய முடியும்.
3. மண்
மூலம் பரவும் நோய் தாக்கம் குறைகிறது.
4. நாற்றுக்களின் பராமரிப்பு எளிதாகிறது.
5. விதைக்கும் விதை அளவு குறைகிறது.
6. நடவின் போது நாற்றுக்களின் வேர்கள் பாதிக்கபடுவதில்லை.
நடவு வயலில் நாற்றுகளிம் இடைவெளின் மற்றும்
எண்ணிக்கை:
மிளகாய் சாகுபடியில் நாற்றாங்காளில்
இருந்து கொண்டுவரப்படும் நாற்றுகளை குரைந்தபட்சம் 2 அடி x 2
அடி இடைவெளியில் நடலாம் மற்றும் அதிகபட்சம் 2’ ¾” அடி x 2’ ¾”அடி
இடைவெளியில் நடலாம். இந்த இடைவெளி மிளகாயின் ரகத்திற்கு ஏற்ப மாறுபடும்.
மேற்கூறிய இருமடி பாத்தி முறைப்படி நடவு வயலில் நடவு செய்தால்
குறைந்த பட்சம் 3000 ( 90 வரிசை x 33 வரிசை = 2970) மிளகாய்
செடிகளை நடவு செய்யலாம்.
இயற்கை இடுபொருட்கள்:
மீன் அமிலம், பன்சகாவ்யா, இ.ம் கரைசல் – 2, wdc ,
அரப்பு மோர் கரைசல், ஜீவாமிர்தம் மற்றும் பல இயற்கை இடுபொருட்கள் நம் மண்ணை பௌதீக தன்மையுடனும்,
உயிர்ப்புடன் வைத்துக்கொள்வதுடன், பயிர்களுக்கு வளர்ச்சி ஊக்கீயாகவும், பூச்சி விரட்டியாகவும்
ம்ற்றும் மண்ணில் உள்ள நன்மை பயக்கும் நூண்ணுயிரிகள், மண்புழு மற்றும் பல உயிர்களுக்கு
நம் நிலத்தில் வாழ வழி செய்கிறது.
இந்த இயற்கை இடுபொருட்கள் குறைந்த செலவில் நம் பயிர்களுக்கு
தேவையான தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து மற்றும் இன்னும் பலநுண்ணுட்டச்சத்துக்களை
தருகிறது.
|
வ.எண் |
இயற்கை
இடுபொருள் |
சத்துக்கள் |
பயன்கள் |
கால இடைவெளி |
|
1 |
மீன் அமிலம் |
இதில்
பயிருக்கு தேவையான தழைச்சத்து, மணிச்சத்து,
சாம்பல் சத்து, நுண்ணூட்டச்சத்துக்கள் உள்ளன. |
பூச்சிகொல்லியாகவும், வளர்ச்சி ஊக்கியாகவும் செயல்படுகிறது மற்றும் பூ பூக்கும் தருணத்தில் பயன்படுத்தும்போது
பூக்கள் நன்றாக பூக்கும் மற்றும் காய்க்கும் திறன் அதிகரிக்கும் |
15 முதல் 30
நாள் இடைவெளியில் கொடுக்கலாம் |
|
2 |
பன்சகாவ்யா |
இதில்
பயிருக்கு தேவையான தழைச்சத்து, மணிச்சத்து,
சாம்பல் சத்து, நுண்ணூட்டச்சத்துக்கள் மற்றும் பயிர் வளர்ச்சி ஊக்கிகளான இண்டோல் அசிடிக் அமிலம் மற்றும் ஜிப்ரலிக் அமிலம் ஆகியவையும் உள்ளன. |
பூச்சிகொல்லியாகவும், வளர்ச்சி ஊக்கியாகவும் செயல்படுகிறது |
15 முதல் 30
நாள் இடைவெளியில் கொடுக்கலாம் |
|
3 |
இ.ம் கரைசல்
– 2 |
இதில்
பயிருக்கு தேவையான தழைச்சத்து, மணிச்சத்து,
சாம்பல் சத்து, நுண்ணூட்டச்சத்துக்கள் உள்ளன. |
|
15 முதல் 30
நாள் இடைவெளியில் கொடுக்கலாம் |
|
4 |
அரப்பு மோர்
கரைசல் |
ஜிப்ரலிக் அமிலம் என்ற வளர்ச்சி ஊக்கி
உள்ளது |
நிறைய மற்றும்
முழுவதும் காயாக மாறக்கூடிய பூக்கள் பூக்க உதவுகிறது. |
பயிரில் பூ பூக்கும்
காலத்திற்கு 10 நாட்கள் முன்பு மற்றும் பூ பூத்த பின் தெளிக்கலாம். |
|
5 |
ஜீவாமிர்தம் |
அனைத்துவித சத்துக்களும் அடங்கியுள்ளது. |
1.விதை நேர்த்தி
செய்ய. 2.மண்புழு வரவு
அதிகரிக்க. 3.நுண்ணுயிரிகளின்
பெருக்கம். |
7 முதல் 21 நாள்
இடைவெளியில் ஒருமுறை தரைவழி கொடுக்கலாம். |
|
6 |
வேஸ்ட் டீகம்போஸர்
கரைசல் (WDC) |
|
1.நுண்ணுயிரிகளின்
பெருக்கம். 2.பூச்சி விரட்டியாக
செயல்படுகிறது. 3.மண்ணின் அமில கார தன்மையை நிலைபடுத்துகிறது4. நிறைய பூக்கள் பூக்க
உதவுகிறது. 5. மண்புழு வரவு
அதிகரிக்கிறது. |
15 முதல் 30
நாள் இடைவெளியில் கொடுக்கலாம் |
|
7 |
புண்ணாக்கு கரைசல் |
இதில்
பயிருக்கு தேவையான மணிச்சத்து, சாம்பல் சத்து உள்ளன.
|
1.நிறைய மற்றும்
முழுவதும் காயாக மாறக்கூடிய பூக்கள் பூக்க உதவுகிறது. 2.திரட்சியான
மிளகாய் பெற உதவுகிறது. |
பயிரில் பூ பூக்கும்
காலத்திற்கு 10 நாட்கள் முன்பு தரைவழி கொடுக்கலாம் |
|
8 |
எருக்க கரைசல் |
போரான் சத்து உள்ளது.
|
1.சரியான அளவு
மிளகாய் பெற உதவுகிறது. 2.பிஞ்சுகள் உதிர்வதை தடுக்கிறது. |
பயிரில் பூ பூக்கும்
காலத்திற்கு 10 நாட்கள் முன்பிலிருந்து 15 முதல் 20 நாட்களுக்கு ஒருமுறை தரைவழி கொடுக்கலாம் |
மிளகாய் சாகுபடிக்கு
தேவையான இயற்கை இடுபொருள் மற்றும் இயற்கை பூச்சி விரட்டிக்கான உத்தேச கால அட்டவணை
(180 வாழ் நாள் மிளகாய்
ரகம்)
|
நாள் |
இயற்கை இடுபொருள் |
பூச்சி விரட்டி |
முறை |
அளவு |
ஒரு ஏக்கருக்கு |
|
25 |
|
சூடோமோனஸ் |
தரைவழி |
1 லி |
1 ஏக்கர் |
|
26 |
மீன் அமிலம் |
|
தெளிப்பு |
100 மிலி /10 லி நீர்
(1 tank) |
10 முதல்
15 tank |
|
27 |
|
அக்னி அஸ்திரம் |
தெளிப்பு |
300 மிலி /10 லி நீர்
(1 tank) |
10 முதல்
15 tank |
|
28 |
வேஸ்ட் டீகம்போஸர் கரைசல் (WDC) |
|
தெளிப்பு |
5 லி WDC + 5 லி
நீர் (1 tank) |
10 முதல்
15 tank |
|
28 |
ஜீவாமிர்தம், புண்ணாக்கு கரைசல் |
|
தரைவழி |
200 லி, 200 லி |
1 ஏக்கர் |
|
30 |
|
சூடோமோனஸ் |
தெளிப்பு |
50 மிலி /10 லி நீர் (1 tank) |
10 முதல் 15 tank |
|
33 |
|
கற்பூர கரைசல் |
தெளிப்பு |
100 மிலி /10 லி நீர்
(1 tank) |
10 முதல்
15 tank |
|
35 |
பன்சகாவ்யா |
|
தெளிப்பு |
300 மிலி /10 லி நீர்
(1 tank) |
10 முதல்
15 tank |
|
35 |
பன்சகாவ்யா |
|
தரைவழி |
2 லி அல்லது
3 லி |
1 ஏக்கர் |
|
38 |
|
வெர்டிசிலியம்
லக்கானி |
தெளிப்பு |
50 மிலி /10 லி நீர்
(1 tank) |
10 முதல்
15 tank |
|
40 |
|
அக்னி அஸ்திரம் |
தெளிப்பு |
300 மிலி /10 லி நீர்
(1 tank) |
10 முதல்
15 tank |
|
42 |
மீன் அமிலம் |
|
தெளிப்பு |
100 மிலி /10 லி நீர்
(1 tank) |
10 முதல்
15 tank |
|
42 |
மீன் அமிலம் |
|
தரைவழி |
1 லி அல்லது 2 லி |
1 ஏக்கர் |
|
43 |
வேஸ்ட் டீகம்போஸர் கரைசல் (WDC) |
|
தெளிப்பு |
5 லி WDC + 5 லி
நீர் (1 tank) |
10 முதல்
15 tank |
|
45 |
|
பெவெரியா
பேசியானா |
தெளிப்பு |
50 மிலி /10 லி நீர்
(1 tank) |
10 முதல்
15 tank |
|
|
|
|
|
|
|
|
49 |
மீன் அமிலம் |
|
தெளிப்பு |
100 மிலி /10 லி நீர்
(1 tank) |
10 முதல்
15 tank |
|
49 |
இ.ம் கரைசல் – 2 |
|
தெளிப்பு |
300 மிலி /10 லி நீர்
(1 tank) |
10 முதல்
15 tank |
|
49 |
இ.ம் கரைசல் – 2 |
|
தரைவழி |
1 லி அல்லது 2 லி |
1 ஏக்கர் |
|
50 |
எருக்க கரைசல் |
|
தரைவழி |
200 லி |
1 ஏக்கர் |
|
51 |
அரப்பு மோர் கரைசல் |
|
தெளிப்பு |
5 லி /100 லி நீர் |
1 ஏக்கர் |
|
53 |
|
சூடோமோனஸ் |
தரைவழி |
1 லி |
1 ஏக்கர் |
|
54 |
|
அக்னி அஸ்திரம் |
தெளிப்பு |
300 மிலி /10 லி நீர்
(1 tank) |
10 முதல்
15 tank |
|
56 |
பன்சகாவ்யா |
|
தெளிப்பு |
300 மிலி /10 லி நீர்
(1 tank) |
10 முதல்
15 tank |
|
56 |
ஜீவாமிர்தம், புண்ணாக்கு கரைசல் |
|
தரைவழி |
200 லி, 200 லி |
1 ஏக்கர் |
|
60 |
|
சூடோமோனஸ் |
தெளிப்பு |
50 மிலி /10 லி நீர் (1 tank) |
10 முதல் 15 tank |
|
62 |
|
கற்பூர கரைசல் |
தெளிப்பு |
100 மிலி /10 லி நீர்
(1 tank) |
10 முதல்
15 tank |
|
63 |
வேஸ்ட் டீகம்போஸர் கரைசல் (WDC) |
|
தெளிப்பு |
5 லி WDC + 5 லி
நீர் (1 tank) |
10 முதல்
15 tank |
|
63 |
வேஸ்ட் டீகம்போஸர் கரைசல் (WDC) |
|
தரைவழி |
200 லி |
1 ஏக்கர் |
|
65 |
எருக்க கரைசல் |
|
தரைவழி |
200 லி |
1 ஏக்கர் |
|
66 |
அரப்பு மோர் கரைசல் |
|
தெளிப்பு |
5 லி /100 லி நீர் |
1 ஏக்கர் |
|
68 |
|
வெர்டிசிலியம்
லக்கானி |
தெளிப்பு |
50 மிலி /10 லி நீர்
(1 tank) |
10 முதல்
15 tank |
|
70 |
மீன் அமிலம் |
|
தெளிப்பு |
100 மிலி /10 லி நீர்
(1 tank) |
10 முதல்
15 tank |
|
70 |
மீன் அமிலம் |
|
தரைவழி |
1 லி அல்லது 2 லி |
1 ஏக்கர் |
|
71 |
|
அக்னி அஸ்திரம் |
தெளிப்பு |
300 மிலி /10 லி நீர்
(1 tank) |
10 முதல்
15 tank |
|
75 |
|
பெவெரியா
பேசியானா |
தெளிப்பு |
50 மிலி /10 லி நீர்
(1 tank) |
10 முதல்
15 tank |
|
77 |
இ.ம் கரைசல் – 2 |
|
தெளிப்பு |
300 மிலி /10 லி நீர்
(1 tank) |
10 முதல்
15 tank |
|
77 |
இ.ம் கரைசல் – 2 |
|
தரைவழி |
1 லி அல்லது 2 லி |
1 ஏக்கர் |
|
80 |
எருக்க கரைசல் |
|
தரைவழி |
200 லி |
1 ஏக்கர் |
|
81 |
அரப்பு மோர் கரைசல் |
|
தெளிப்பு |
5 லி /100 லி நீர் |
1 ஏக்கர் |
|
82 |
|
சூடோமோனஸ் |
தரைவழி |
1 லி |
1 ஏக்கர் |
|
83 |
|
அக்னி அஸ்திரம் |
தெளிப்பு |
300 மிலி /10 லி நீர்
(1 tank) |
10 முதல்
15 tank |
|
84 |
மீன் அமிலம் |
|
தெளிப்பு |
100 மிலி /10 லி நீர்
(1 tank) |
10 முதல்
15 tank |
|
84 |
மீன் அமிலம் |
|
தரைவழி |
1 லி அல்லது 2 லி |
1 ஏக்கர் |
|
88 |
|
சூடோமோனஸ் |
தெளிப்பு |
50 மிலி /10 லி நீர் (1 tank) |
10 முதல் 15 tank |
|
91 |
|
கற்பூர கரைசல் |
தெளிப்பு |
100 மிலி /10 லி நீர்
(1 tank) |
10 முதல்
15 tank |
|
91 |
ஜீவாமிர்தம், புண்ணாக்கு கரைசல் |
|
தரைவழி |
200 லி, 200 லி |
1 ஏக்கர் |
|
93 |
|
அக்னி அஸ்திரம் |
தெளிப்பு |
300 மிலி /10 லி நீர்
(1 tank) |
10 முதல்
15 tank |
|
95 |
வேஸ்ட் டீகம்போஸர் கரைசல் (WDC) |
|
தெளிப்பு |
5 லி WDC + 5 லி
நீர் (1 tank) |
10 முதல்
15 tank |
|
95 |
வேஸ்ட் டீகம்போஸர் கரைசல் (WDC) |
|
தரைவழி |
200 லி |
1 ஏக்கர் |
|
95 |
எருக்க கரைசல் |
|
200 லி |
200 லி |
1 ஏக்கர் |
|
96 |
அரப்பு மோர் கரைசல் |
|
தெளிப்பு |
5 லி /100 லி நீர் |
1 ஏக்கர் |
|
98 |
பன்சகாவ்யா |
|
தெளிப்பு |
300 மிலி /10 லி நீர்
(1 tank) |
10 முதல்
15 tank |
|
98 |
பன்சகாவ்யா |
|
தரைவழி |
2 லி அல்லது
3 லி |
1 ஏக்கர் |
|
100 |
|
வெர்டிசிலியம்
லக்கானி |
தெளிப்பு |
50 மிலி /10 லி நீர்
(1 tank) |
10 முதல்
15 tank |
|
104 |
|
அக்னி அஸ்திரம் |
தெளிப்பு |
300 மிலி /10 லி நீர்
(1 tank) |
10 முதல்
15 tank |
|
105 |
இ.ம் கரைசல் – 2 |
|
தெளிப்பு |
300 மிலி /10 லி நீர்
(1 tank) |
10 முதல்
15 tank |
|
105 |
இ.ம் கரைசல் – 2 |
|
தரைவழி |
1 லி அல்லது 2 லி |
1 ஏக்கர் |
|
108 |
|
பெவெரியா
பேசியானா |
தெளிப்பு |
50 மிலி /10 லி நீர்
(1 tank) |
10 முதல்
15 tank |
|
110 |
வேஸ்ட் டீகம்போஸர் கரைசல் (WDC) |
|
தெளிப்பு |
5 லி WDC + 5 லி
நீர் (1 tank) |
10 முதல்
15 tank |
|
110 |
எருக்க கரைசல் |
|
தரைவழி |
200 லி |
1 ஏக்கர் |
|
111 |
அரப்பு மோர் கரைசல் |
|
தெளிப்பு |
5 லி /100 லி நீர் |
1 ஏக்கர் |
|
112 |
இ.ம் கரைசல் – 2 |
|
தெளிப்பு |
300 மிலி /10 லி நீர்
(1 tank) |
10 முதல்
15 tank |
|
112 |
இ.ம் கரைசல் – 2 |
|
தரைவழி |
1 லி அல்லது
2 லி |
1 ஏக்கர் |
|
115 |
பன்சகாவ்யா |
|
தெளிப்பு |
300 மிலி /10 லி நீர்
(1 tank) |
10 முதல்
15 tank |
|
115 |
|
சூடோமோனஸ் |
தரைவழி |
1 லி |
1 ஏக்கர் |
|
118 |
|
அக்னி அஸ்திரம் |
தெளிப்பு |
300 மிலி /10 லி நீர்
(1 tank) |
10 முதல்
15 tank |
|
119 |
மீன் அமிலம் |
|
தெளிப்பு |
100 மிலி /10 லி நீர்
(1 tank) |
10 முதல்
15 tank |
|
119 |
மீன் அமிலம் |
|
தரைவழி |
1 லி அல்லது 2 லி |
1 ஏக்கர் |
|
122 |
|
சூடோமோனஸ் |
தெளிப்பு |
50 மிலி /10 லி நீர் (1 tank) |
10 முதல் 15 tank |
|
125 |
|
கற்பூர கரைசல் |
தெளிப்பு |
100 மிலி /10 லி நீர்
(1 tank) |
10 முதல்
15 tank |
|
125 |
எருக்க கரைசல் |
|
தரைவழி |
200 லி |
1 ஏக்கர் |
|
126 |
அரப்பு மோர் கரைசல் |
|
தெளிப்பு |
5 லி /100 லி நீர் |
1 ஏக்கர் |
|
127 |
|
அக்னி அஸ்திரம் |
தெளிப்பு |
300 மிலி /10 லி நீர்
(1 tank) |
10 முதல்
15 tank |
|
127 |
ஜீவாமிர்தம், புண்ணாக்கு கரைசல் |
|
தரைவழி |
200 லி, 200 லி |
1 ஏக்கர் |
|
130 |
|
வெர்டிசிலியம்
லக்கானி |
தெளிப்பு |
50 மிலி /10 லி நீர்
(1 tank) |
10 முதல்
15 tank |
|
133 |
வேஸ்ட் டீகம்போஸர் கரைசல் (WDC) |
|
தெளிப்பு |
5 லி WDC + 5 லி
நீர் (1 tank) |
10 முதல்
15 tank |
|
133 |
வேஸ்ட் டீகம்போஸர் கரைசல் (WDC) |
|
தரைவழி |
200 லி |
1 ஏக்கர் |
|
135 |
|
பெவெரியா
பேசியானா |
தெளிப்பு |
50 மிலி /10 லி நீர்
(1 tank) |
10 முதல்
15 tank |
|
140 |
பன்சகாவ்யா |
|
தெளிப்பு |
300 மிலி /10 லி நீர்
(1 tank) |
10 முதல்
15 tank |
|
140 |
பன்சகாவ்யா |
|
தரைவழி |
2 லி அல்லது
3 லி |
1 ஏக்கர் |
|
141 |
எருக்க கரைசல் |
|
தரைவழி |
200 லி |
1 ஏக்கர் |
|
142 |
அரப்பு மோர் கரைசல் |
|
தெளிப்பு |
5 லி /100 லி நீர் |
1 ஏக்கர் |
|
144 |
|
சூடோமோனஸ் |
தரைவழி |
1 லி |
1 ஏக்கர் |
|
145 |
|
அக்னி அஸ்திரம் |
தெளிப்பு |
300 மிலி /10 லி நீர்
(1 tank) |
10 முதல்
15 tank |
|
147 |
இ.ம் கரைசல் – 2 |
|
தெளிப்பு |
300 மிலி /10 லி நீர்
(1 tank) |
10 முதல்
15 tank |
|
147 |
இ.ம் கரைசல் – 2 |
|
தரைவழி |
1 லி அல்லது 2 லி |
1 ஏக்கர் |
|
150 |
|
சூடோமோனஸ் |
தெளிப்பு |
50 மிலி /10 லி நீர் (1 tank) |
10 முதல் 15 tank |
|
|
|
|
|
|
|
|
153 |
வேஸ்ட் டீகம்போஸர் கரைசல் (WDC) |
|
தெளிப்பு |
5 லி WDC + 5 லி
நீர் (1 tank) |
10 முதல்
15 tank |
|
154 |
மீன் அமிலம் |
|
தெளிப்பு |
100 மிலி /10 லி நீர்
(1 tank) |
10 முதல்
15 tank |
|
154 |
மீன் அமிலம் |
|
தரைவழி |
1 லி அல்லது 2 லி |
1 ஏக்கர் |
|
155 |
|
கற்பூர கரைசல் |
தெளிப்பு |
100 மிலி /10 லி நீர்
(1 tank) |
10 முதல்
15 tank |
|
155 |
எருக்க கரைசல் |
|
தரைவழி |
200 லி |
1 ஏக்கர் |
|
156 |
அரப்பு மோர் கரைசல் |
|
தெளிப்பு |
5 லி /100 லி நீர் |
1 ஏக்கர் |
|
160 |
|
அக்னி அஸ்திரம் |
தெளிப்பு |
300 மிலி /10 லி நீர்
(1 tank) |
10 முதல்
15 tank |
|
161 |
பன்சகாவ்யா |
|
தெளிப்பு |
300 மிலி /10 லி நீர்
(1 tank) |
10 முதல்
15 tank |
|
161 |
ஜீவாமிர்தம், புண்ணாக்கு கரைசல் |
|
தரைவழி |
200 லி, 200 லி |
1 ஏக்கர் |
|
163 |
|
வெர்டிசிலியம்
லக்கானி |
தெளிப்பு |
50 மிலி /10 லி நீர்
(1 tank) |
10 முதல்
15 tank |
|
168 |
வேஸ்ட் டீகம்போஸர் கரைசல் (WDC) |
|
தெளிப்பு |
5 லி WDC + 5 லி
நீர் (1 tank) |
10 முதல்
15 tank |
|
168 |
வேஸ்ட் டீகம்போஸர் கரைசல் (WDC) |
|
தரைவழி |
200 லி |
1 ஏக்கர் |
|
169 |
|
பெவெரியா
பேசியானா |
தெளிப்பு |
50 மிலி /10 லி நீர்
(1 tank) |
10 முதல்
15 tank |
|
170 |
எருக்க கரைசல் |
|
தரைவழி |
200 லி |
1 ஏக்கர் |
|
171 |
அரப்பு மோர் கரைசல் |
|
தெளிப்பு |
5 லி /100 லி நீர் |
1 ஏக்கர் |
|
172 |
|
சூடோமோனஸ் |
தரைவழி |
1 லி |
1 ஏக்கர் |
|
174 |
|
அக்னி அஸ்திரம் |
தெளிப்பு |
300 மிலி /10 லி நீர்
(1 tank) |
10 முதல்
15 tank |
|
175 |
பன்சகாவ்யா |
|
தெளிப்பு |
300 மிலி /10 லி நீர்
(1 tank) |
10 முதல்
15 tank |
|
175 |
பன்சகாவ்யா |
|
தரைவழி |
2 லி அல்லது
3 லி |
1 ஏக்கர் |
|
178 |
இ.ம் கரைசல் – 2 |
|
தெளிப்பு |
300 மிலி /10 லி நீர்
(1 tank) |
10 முதல்
15 tank |
தேவையான
இயற்கை இடுபொருள் மற்றும் பூச்சி விரட்டிக்கான கணக்கீடு
|
இயற்கை இடுபொருள்/ பூச்சி விரட்டி |
முறை |
|
மொத்த அளவு |
மொத்தம் |
|
|
பயன்படுத்திய நாட்கள் |
ஒருமுறை அளவு |
||||
|
பன்சகாவ்யா |
தரைவழி |
4 |
3 லி |
12 லி |
33 லி |
|
பன்சகாவ்யா |
தெளிப்பு |
7 |
3 லி |
21 லி |
|
|
இ.ம் கரைசல்
– 2 |
தரைவழி |
6 |
2 லி |
12 லி |
30 லி |
|
இ.ம் கரைசல்
– 2 |
தெளிப்பு |
6 |
3 லி |
18 லி |
|
|
மீன் அமிலம் |
தரைவழி |
7 |
2 லி |
14 லி |
24 லி |
|
மீன் அமிலம் |
தெளிப்பு |
7 |
1 லி |
10 லி |
|
|
வேஸ்ட் டீகம்போஸர்
கரைசல் |
தரைவழி |
4 |
200 லி |
800 லி (2
ட்ரம் |
6 ட்ரம் |
|
வேஸ்ட் டீகம்போஸர்
கரைசல் |
தெளிப்பு |
8 |
50 லி |
400 லி (2
ட்ரம்) |
|
|
சூடோமோனஸ் |
தரைவழி |
6 |
1 லி |
6 லி |
8.5 லி |
|
சூடோமோனஸ் |
தெளிப்பு |
5 |
0.50 லி |
2.50 லி |
|
|
பெவெரியா பேசியானா |
தெளிப்பு |
5 |
0.50 லி |
2.50 லி |
2.50 லி |
|
வெர்டிசிலியம் லக்கானி |
தெளிப்பு |
5 |
0.50 லி |
2.50 லி |
2.50 லி |
|
அக்னி அஸ்திரம் |
தெளிப்பு |
12 |
3 லி |
36 லி |
36 லி |
|
கற்பூர கரைசல் |
தெளிப்பு |
5 |
1 லி |
5 லி |
5 லி |
|
அரப்பு மோர்
கரைசல் |
தெளிப்பு |
8 |
5 லி |
40 லி |
40 லி |
|
எருக்க கரைசல் |
தரைவழி |
8 |
12 லி |
12 லி |
12 லி |
|
ஜீவாமிர்தம்
|
தரைவழி |
5 |
200 லி |
1000 லி (5
ட்ரம்) |
5 ட்ரம் |
|
புண்ணாக்கு கரைசல் |
தரைவழி |
5 |
200 லி |
1000 லி (5
ட்ரம்) |
5 ட்ரம் |
மிளகாய்
செடியை தாக்கும் பூச்சிகள், நோய்கள் மற்றும் நுண்ணியிரிகள்:
பூச்சிகள் மற்றும் தீமை செய்யும் நுண்ணியிரிகள் தாக்குதலால்,
நாம் மிளகாய் மற்றும் பல பயிர்களில் மகசூல் மற்றும் தரம் குறைந்து நஷ்டம் அடைகிறொம்.
பூச்சிகளில் நன்மை செய்யும் பூச்சிகளும் உண்டு மற்றும் தீமை செய்யும் உண்டு (பூச்சிகள்
மனிதர்களை போல உணவு மற்றும் இருப்பிடம் தேடியே பயிர்களை நாடுகின்றன என்பதை நினைவில்
வைத்துக்கொள்ளவும்). எனவே இவற்றை முதலில் இனம் கண்டு கட்டுபடுத்துவது மிக முக்கியம்
ஆகும்.
மிளகாய் செடியை தாக்கும் பூச்சிகள்:
1.
2. சாறு உறிஞ்சும் பூச்சிகள்
3. வெள்ளை
ஈ
4. தத்துப்பூச்சி
5. மாவுப்பூச்சி
6.
7. கடித்துண்ணும்
பூச்சிகள்
8. கடலைப்புழு
9. மஞ்சள்
முரனை சிலந்தி
10. எறும்பு
தாக்குதல்
மிளகாய் செடியை தாக்கும் நோய்கள் மற்றும் நுண்ணியிரிகள்:
1. வேர்
அழுகல் நோய்
2. வைரஸ்
தாக்குதல்
3. இலை
கருகல்
4. பழ
நுனி அழுகல்
சாறு உறிஞ்சும் பூச்சிகள்:
மிளகாய் சாகுபடியில் முக்கியமான இழப்பு சாறு உறிஞ்சும்
பூச்சிகள் மூலம் எற்படுகிறது. இந்த பூச்சிகள் இலையில் உள்ள நரம்புகளை கடித்து இலைகள்
உள்பக்கம் குவிந்து காணப்படும் (இலை சுருட்டல் நோய்க்கு இவையும் ஒரு காரணம்).
அறிகுறிகள்:
1. இலைகள்
உள்நோக்கி சுருண்டு காணப்படும்.
2. வளர்ச்சி
குன்றி காணப்படும்.
3. பூக்கள்
சிறுத்து காணப்படும்.
4. இலையின்
அடியில் மினுமினுப்பாக இருக்கும்
இலைப்பேனால்
பாதிக்கபட்டுள்ள மிளகாய் செடி
பாதிப்புகள்:
1. நரம்புகள்
மூலம் இலைகளுக்கு சத்து கடத்துவது தடுக்கபடுவதன் மூலம் இலைகளின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது.
இதன் மூலம் ஒளிச்சேர்க்கை பாதிக்க படுவதால் செடிகள் வளர்ச்சி குன்றி காணப்படும்.
2. பூ
எடுப்பது குறைந்து விடும்.
3. இவை
மிளகாயில் ஓட்டை ஏற்படுத்தி உள்ளே சென்று,
மிளகாயில் உள்ள அனைத்து விதை மற்றும் தண்டை உண்று நமக்கு மிளகாயின் வெளிப்பகுதியில்
உள்ள் ஓடு போன்ற அமைப்பு மட்டுமே கிடைக்கும்.
பயிர் பாதுகாப்பு:
1. 50 மிலி வெர்டிசிலியம் லக்கானி 10 லி தண்ணீருடன் கலந்து 15 நாட்களுக்கு
ஒருமுறை இலைகளின் மீது நன்றாக நனையுமாறு தெளிக்க வேண்டும்.
2. அக்னி அஸ்திரம் வாரம் ஒருமுறை இலைகளின்
மீது நன்றாக நனையுமாறு தெளிக்க வேண்டும்.
3. வேப்பங்கொட்டை (அ) வேப்ப எண்ணை கரைசலை
வாரம் ஒருமுறை இலைகளின் மீது நன்றாக நனையுமாறு தெளிக்க வேண்டும்.
4. அகத்தியை
ஊடு பயிராக பயிரிடலாம். இதன் நிழல் இலைப்பேனை கட்டுபடுத்தும்.
5. வரப்பு
ஒரங்களில் சூரிய காந்தி, மக்காசோளம் போன்ற சாறு உறிஞ்சும் பூச்சிகளை கவர்ந்து இழுக்கும்
பயிர்களை நடவு செய்யலாம். இலைப்பேன் முதலில் இவற்றை தாக்கி அங்கு முட்டைகளிடும். இவைகளை
ஒன்றாக சேகரித்து அங்கு அழித்து விடலாம்.
6. களைகள்
இல்லாமல் நிலத்தை பராமரிக்க வேண்டும்.
7. மஞ்சள்
வண்ண ஒட்டுண்ணி அட்டையை பயன்படுத்தி இவற்றை கட்டுபடுத்தலாம்.
மஞ்சள் வண்ண ஒட்டுண்ணி அட்டை
அசுவினி பூச்சிகள் வெள்ளை ஈ
மாவுபூச்சிகள் இலைப்பேன்
சாறு உறிஞ்சும் பூச்சிகளின்
தீவிர தாக்குதலை கட்டுபடுத்துதல்:
மிளகாய் பயிரில் சாறு உறிஞ்சும் பூச்சிகளின்
தாக்குதல் மிக அதிகமாக இருந்தால் கீழ்கண்ட பொருட்களை பயன்படுத்தி இவற்றை கட்டுபடுத்தலாம்,
1. வெர்டிசிலியம் லக்கானி - 500
மிலி
2. மைதா - 500
கிராம்
3. நாட்டு
சர்க்கரை - 500 கிராம்
4. கடலை பிண்ணாக்கு - 500
கிராம்
5. புளித்த மோர் - 1
லி
6. தண்ணீர் - 100 லி
மேற்கூறிய பொருட்களை ஒன்றாக கலந்து
ஒரு ட்ரம்மில் இரண்டு நாட்கள் மூடி வைத்து பின் இந்த கரைசலை மிளகாய்
பயிரின் மீது நான்றாக நனையுமாறு ( இலையின் முன்புறம் மற்றும் பின்புறம்) மூன்று நாட்களுக்கு
ஒருமுறை தேளிக்க வேண்டும்.
கடித்துண்ணும்
பூச்சிகள்:
மிளகாய் சாகுபடியில் இழப்பு கடித்துண்ணும் பூச்சிகள்
மூலம் மகசூல் குறைகிறது (இப்புழுவானது காய்கள் வளர்ந்து வரும் சமயத்தில் காய்களைக்
குடைந்து சேதப்படுத்துகிறது) மற்றும் பயிர்களின்
வளர்ச்சி குன்றி அதன் வாழ்னால் குறைகிறது.
அறிகுறிகள்:
1. வளர்ச்சி
குன்றி காணப்படும்.
2. பூக்கள்
சிறுத்து காணப்படும்.
3. செடிகளின்
தண்டுகளை கிள்ளி உள்ளே பார்த்தால் புழுக்கள் காணப்படும்.
4. இப்புழுவானது
காய்கள் வளர்ந்து வரும் சமயத்தில் காய்களைக் குடைந்து சேதப்படுத்துகிறது.
பயிர் பாதுகாப்பு:
1. இந்த
வகையான காய்ப்புழு வருவது வரும் சாத்தியக்கூறுகள் இல்லாத அல்லது குறைவாக உள்ள ரகங்களை
பயிரிடலாம்.
2. .சூரிய
ஒளியில் இயங்கும் விளக்குப்பொறி ஒரு ஏக்கருக்கு இரண்டு எண்ணிக்கையில் மாலை ஆறு முப்பது
முதல் 10 மணி வரை பயன்படுத்தலாம்.
3. டிரைக்கோகிரம்மா
அட்டைகளை கட்டிவிடலாம்.
4. பவேரியா
பேசியானா அல்லது பேசில்லஸ் துரிஞ்சி என்சிஸ் என்ற உயிரியல் திரவங்களை பத்து லிட்டருக்கு
50 மில்லி கலந்து தெளிக்கலாம்.
5. வேப்ப
எண்ணெய் 10 லிட்டருக்கு 30 மில்லி கலந்து சீயக்காய் அல்லது சோப்பு கரைசலில் கரைத்து
தெளிக்கலாம்
6. மூலிகை
பூச்சி விரட்டி எட்டு நாட்களுக்கு ஒரு முறை தெளிக்கலாம்.
7. இந்தப்
புழுக்களை உருவாக்கும் பூச்சி இனங்களை தடுக்கும் வகையிலான பொறி பயிர்களாக கொள்ளு, சாமந்தி,
மக்காச் சோளம், ஆமணக்கு சூரியகாந்தி. வெள்ளைச் சோளம் போன்ற பயிர்களை வரப்புகளில் நட்டு
வைக்கலாம்.
8. இனக்கவர்ச்சி
பொறிகளை பயன்படுத்தலாம்.
காய்ப்புழு மஞ்சள் முரனை சிலந்தி
புகையிலை
வெட்டுபுழு கடலைப்புழு
மிளகாய் செடியை தாக்கும் நோய்கள் மற்றும் நுண்ணியிரிகள்:
வைரஸ்
தாக்குதல்
மிளகாய் செடியில் வைரஸ் காற்றின் மூலம் அல்லது பூச்சிகள்
மூலம் ஒரு வயலில் இருந்து மற்றொரு வயலுக்கு பரவுகிறது. வைரஸ் தாக்குதலுக்கு உள்ளான
மிளகாய் செடியை அப்புறப்படுத்துவதன் மூலமும், வயலை சுற்றி உயிர் வேலி அமைப்பதன் மூலமும்
வைரஸ் தாக்குதலை கட்டுபடுத்தலாம்.
வைரஸ்
தாக்குதலுக்கு உள்ளான மிளகாய் செடியை கீழ்கண்ட முறையில் மீட்கலாம்,
ஒரு லிட்டர் தண்ணீருக்கு 30 கிராம் அளவுள்ள விரலி
மஞ்சள் தூளை கலந்து குறைந்தபட்சம் அரை மணி நேரம் கொதிக்க விடவும். பின்பு அடுப்பில்
இருந்து இறக்கிய பின்பு அதனுடன் 8 முதல் 10 பல் பூண்டு இடித்து உள்ளே போட்டு ஊற வைத்து
ஆறவிடவும்(விரலி மஞ்சள் கடைகளில் வாங்கி நாமே அரைத்து பொடி செய்து கொள்வது மிகவும்
சிறப்பானது).
இவ்வாறு
கிடைத்த ஒரு லிட்டர் திரவத்துடன் ஒரு லிட்டர் தண்ணீர் கலந்து பயிரின் தண்டு ,தரைப்பகுதி,
மற்றும் இலைகளின் முன்னும் பின்னும் படுமாறு நன்கு தெளிக்கலாம். ஐந்து நாட்களுக்கு ஒரு முறை தெளிப்பது நல்லது. தேவைப்பட்டால்
மூன்றாவது முறை தெளிக்கலாம்.
வைரஸ்
போன்ற தாக்குதல்களின் ஆரம்ப அறிகுறி தெரியும் போது ஒரு லிட்டர் தண்ணீருடன் 15 கிராம்
அளவுள்ள விரலி மஞ்சள் தூளை கலந்து கொதிக்க வைக்காமல் பயிர்கள் மேல் தெளிப்பது நல்ல
பலன் தரும் அதனை ஐந்து நாட்கள் கழித்து மீண்டும் ஒருமுறை தெளிக்கலாம்.
பாதிக்கப்பட்ட
பகுதிகளில் மட்டும் அதிக கவனத்துடன் தெளிப்பது நல்லது. பழைய பாதிக்கப்பட்ட இலைகள் கீழே
விழுந்தவுடன் வரும் புதிய இலைகள் வைரஸ் தாக்கம் இல்லாமல் வரும்.
வைரஸ் நோய் குணம் மாறிய பின்பு தேமோர் கரைசல் அல்லது
பஞ்சகாவிய அல்லது இஎம் கரைசல் தெளிப்பதால் புதிய பூக்கள் உருவாக்கும்.
வசம்பு கரைசல்
முதல் நாள் மதியம் 20
கிராம் வசம்பு 20
கிராம் பால் பெருங்காயம் இரண்டையும் 10
லி தண்ணீருடன் உறவைத்து மறுநாள் மதியத்துக்கு மேல பசையாக அரைத்து கொண்டு. அதை ஊறவைத்த தண்ணீர் கொண்டு கரைத்து வடிகட்டி பின்
தண்ணீர் சேர்த்து தெளிக்கவும்..
3 நாள் இடைவெளி விட்டு 2 முறை வசம்பு + பால் பெருங்காய
கரைசல் தெளித்து. பின்பு 2 நாட்கள் கழித்து 3 நாள் இடைவெளி விட்டு 2 முறை மீன் அமிலம்
தெளிக்கவும்.
வைரஸ்
தாக்குதலுக்கு உள்ளான மிளகாய் செடி
வேர் அழுகல் நோய்:
மிளகாய் செடியில் வேர் அழுகல் நோய் மண்ணில் உள்ள வேர்
புழுக்கள் மூலம் ஏற்படுகிறது. இலை கருகல் மூலம், நம் மிளகாய் செடி வேர் அழுகல் நோயால்
பாதிக்கப்பட்டுள்ளதை அறியாலம். நம் வயலில் வேர் புழு தாக்குதல் ஏற்பட்டவுடனேயே, 1
லி ட்ரைகோடெர்மா ஹர்ஷானியம் (அ) பேசில்லஷ் சப்டிலஷ் (அ) சூடோமோனஸ் தரைவழி கொடுப்பதன் மூலம் வேர் அழுகல் நோயை கட்டுபடுத்தலாம்.
மிளகாயில்
ஊடுபயிர்;
முக்கிய
பயிருடன் (மிளகாய்) சேர்த்து குறுகிய கால சில பயிர்களை பயிரிடுவது ஊடு பயிராகும்.
1. மிளகாயில்
ஊடுபயிராக கொத்தமல்லி மற்றும் கீரை வகைகளை விளைவிக்கலாம்.
2. ஊடுபயிராக
பாரின் ஒருபக்கம் மிளகாயும் மறுபக்கம் வெங்காயம் மற்றும் முள்ளங்கியையும் பயிரிடலாம்
3. வரப்பு
ஒரங்களில் கொள்ளு, சாமந்தி, மக்காச் சோளம், ஆமணக்கு, சூரியகாந்தி. வெள்ளைச் சோளம் போன்ற
பயிர்களை நடலாம் இவை பூச்சி தாக்குதலை கட்டுபடுத்துவதுடுன் சிறிதளவு வருமானத்தையும்
தரும்.
4. அகத்தியை
ஊடு பயிராக பயிரிடலாம். இதன் நிழல் இலைப்பேனை கட்டுபடுத்தும்.
ஊடு
பயிரில் கவனிக்க வேண்டியவை:
1. முதன்மை
பயிருடன் ஒப்பிடுகையில் உயரம் குறைவாக இருக்க வேண்டும்.
2. முதன்மை
பயிரின் மகசூலை குறைக்க கூடாது,
3. இவற்றால்
முதன்மை பயிருக்கு பூச்சி அல்லது நோய் தாக்குதல் ஏற்படக்கூடாது.
4. அந்த
மண்ணிற்கு ஏற்ற ரகமாக இருக்க வேண்டும்.
மிளகாயில் மதிப்பு கூட்டு பொருட்கள்:
1. மிளகாய்
ஊறுகாய்
2. மோர்
மிளகாய்
3. மிளகாய் வினிகர்
4. மிளகாய்
வத்தல்
5. மிளகாய்
தூள்
6. மிளகாய்
சாஸ்
No comments:
Post a Comment